அதிமுகவை ஒன்றிணைப்பு விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அடுத்தடுத்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலரும் நீக்கப்பட்டார்கள். இந்நிலையில் இந்த அதிமுகவை ஒன்றிணைப்பு குறித்து முடிவு எடுக்க இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கொடுத்த கெடு குறித்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு நான் 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை, ஊடகங்கள்தான் அதனை தவறாக புரிந்து கொண்டது. 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் ஒன்றரை மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.
