2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று வெளியிட்டதோடு, மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான முக்கிய தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்தார். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலனை மையப்படுத்தி வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக்கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், சமூகத்தின் விளிம்புநிலை மக்களான திருநங்கைகள் சுயதொழில் தொடங்க வட்டியில்லா கடன் வசதி மற்றும் ஆண்களும் பொருளாதார ரீதியாக முன்னேற ஏதுவாக அவர்களுக்கென தனியாக ‘ஆண்கள் சுய உதவிக் குழுக்கள்’ அமைத்து நிதியுதவி வழங்கப்படும் போன்ற அதிரடித் திட்டங்கள் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி…
தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் அபினேஷ் 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில்…
காதல் விவகாரத்தில் சக பெண் காவலரை ஏமாற்றிய ஆண் காவலரின் செயலால், மனமுடைந்த அந்தப் பெண் காவலர் தற்கொலை முயற்சி…
சென்னையில் உள்ள அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பைத் தமிழக…
விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் சில தவறான தகவல்கள் குறித்து…
தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக…