பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.13 லட்சம்..? மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பலே மோசடி… இளைஞர்களே உஷாரா இருங்க…!!

By Soundarya on சித்திரை 7, 2026

Spread the love

பீகார் மாநிலத்தில் குழந்தை இல்லாத பெண்களுக்குப் பதிலாக இளைஞர்கள் மூலம் கருத்தரிக்க வைப்பதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை காட்டும் மோசடிக் கும்பல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல “குழந்தை பெற்றுத் தந்தால் ₹13 லட்சம், முயற்சி தோல்வியுற்றால் ₹5 லட்சம் ஆறுதல் பரிசு” என அறிவித்து இளைஞர்களை ஏமாற்றிய கும்பலை அம்மாநிலப் போலீசார் கைது செய்தனர். தற்போது அதே பாணியிலான மோசடிகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடிக் கும்பல் குறிப்பாக சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடும் இளைஞர்களைக் குறிவைத்துச் செயல்படுகிறது. பதிவுக் கட்டணம் மற்றும் காப்பீடு என்ற பெயரில் சில ஆயிரங்களை முதலில் வசூலிக்கும் இவர்கள், பின்னர் இளைஞர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்துவிட்டுத் தலைமறைவாகி விடுகின்றனர். இத்தகைய ஆபாசமான மற்றும் நம்பகத்தன்மையற்ற விளம்பரங்களை நம்பி இளைஞர்கள் தங்களது பணத்தையும், நற்பெயரையும் இழக்க வேண்டாம் என்றும், இது போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.