ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காதது (Slow Over-rate), ஐபிஎல் நடத்தை விதிகளின் படி குற்றமாகும். இந்த சீசனில் சிஎஸ்கே அணி செய்யும் முதல் தவறு என்பதால், குறைந்தபட்ச தண்டனையாக கேப்டனுக்கு மட்டும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 212 ரன்கள் குவித்து, டெல்லி அணியை 189 ரன்களுக்குச் சுருட்டி அபார வெற்றி பெற்றது. இருப்பினும், வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு இந்த அபராதச் செய்தி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போட்டியில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி அணியின் நிதிஷ் ராணாவிற்கு அவரது போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
