“பாஜகவுடன் ரூ.1000 கோடி டீல்?” துணை முதல்வர் பதவிக்காக பேரம்… 19 நிமிட வீடியோவால் அதிரும் அரசியல் களம்..!!

By Soundarya on சித்திரை 10, 2026

Spread the love

மேற்கு வங்கத்தில் டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி கட்டப்போவதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கிய ஹுமாயூன் கபீரின் 19 நிமிட வீடியோ ஒன்று தற்போது அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், “பாஜகவுடன் ₹1000 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 60 அல்லது 70 எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றால், பாஜக ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும்” என்று அவர் பேசுவதாக திரிணாமுல் காங்கிரஸ் (TMC) குற்றம் சாட்டியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் இந்த வீடியோவைச் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஹுமாயூன் கபீர் கட்சியுடன் வைத்திருந்த கூட்டணியை அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி உடனடியாக முறித்துக்கொண்டது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஹுமாயூன் கபீர், அந்த வீடியோ போலியானது என்றும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன்னைச் சிக்க வைக்கத் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், தேர்தலுக்கு முன்னதாக வெளியாகியுள்ள இந்த வீடியோ மற்றும் கூட்டணி முறிவு ஆகியவை ஹுமாயூன் கபீரின் அரசியல் பயணத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.