நடிகை மைனா சின்னத்திரை மூலமாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி எனும் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதை தொடர்ந்து பல சீரியலிலும் நடித்துள்ளார். தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக சில வருடம் சினிமா வாழ்க்கையிலிருந்து தள்ளி இருந்தார். தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தனது நடிப்பில் அசத்தி வருகிறார்.

மைனா நந்தினி சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவன் என்ற மகனும் உள்ளார். இது தவிர வெள்ளித்திரையில் விருமன், விக்ரம் போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.

தற்போது நந்தினியின் பெர்றோர்களுக்கு இன்று திருமண நாள் என்பதால் தனது அப்பா அம்மா புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெருவித்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

