போடு செம…! 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகையுடன் ஜோடி சேரும் விஷால்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

By Devi Ramu on ஆவணி 22, 2025

Spread the love

பிரபல நடிகரான விஷாலின் 34-ஆவது திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை ரவி அரசு இயக்குகிறார். இந்த படத்தில் அஞ்சலி நடிக்க போவதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் அஞ்சலி தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான மதகஜராஜா திரைப்படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரும் சிக்கல்களைத் தாண்டி இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான மதகஜராஜா திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு விஷாலுடன் அஞ்சலி மீண்டும் நடிக்க போவதாக அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.