பிரபல காமெடி நடிகரின் மகளுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு…. ஒரே படத்தில் அடித்த ஜாக்பாட்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

By admin on புரட்டாதி 2, 2022

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் கொட்டாச்சி.இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். தற்போது இவரின் மகளான மானஸ்வியும் சினிமாவில் நுழைந்துள்ளார். அஜய் ஞானமுத்துவின் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார்.

   

அப்படத்தில் நடிகை நயன்தாராவின் குழந்தையாக நடித்து அசத்தியிருந்தார். அதில் சொட்ட சொரிகிடுவேன் என்ற க்யூடாக பேசி பலரையும் கவர்ந்தவர். அப்படத்தை தொடர்ந்து இவருக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வகையில் தர்பார், எனிமி மற்றும் மாமனிதன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

   

 

அண்மையில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடித்த மாமனிதன் திரைப்படத்தில் மானஸ்வின் அடித்து அசத்தி இருப்பார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இயக்குனர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார். அதில்,டெல்லி சர்வதேச திரைப்பட விழா திரையிடல் காரணமாக பணத்தில் சிறப்பாக நடித்த பேபி மானஸ்விக்கு இந்தி படத்தில் உடனே நடிக்க அழைப்பு வந்தது மிகுந்த மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.