தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “காதல் கொண்டேன்” படத்தில் அறிமுகமான நடிகை தான் சோனியா அகர்வால். மேலும், இந்த படத்திற்கு பிறகு அதே படத்தை இயக்கிய இயக்குனர் செல்வராகவன் எடுத்த “7G ரெயின்போ காலனி” படமும் பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

ஆனால் போக போக நடிகை சோனியாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். தற்போது, சீரியல்களிலும் நடித்து வருகிறார் நடிகை சோனியா.

இந்நிலையில், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை சோனியா அகர்வால் அவர்கள். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் பின் பக்கம் திரும்பி நின்றுகொண்டு, பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் பளிங்கு சிலை போன்று இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.
View this post on Instagram
