நடிகை விஜியின் மகள் யார் தெரியும்மா ..?? இந்த பிரபல நடிகைதான் இவரது மகளா ..?? ஆச்சிரியத்தில் ரசிகர்கள் ..!!

By Archana on ஆனி 19, 2021

Spread the love

பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தில் ரஜினியின் தங்கையாக கால்களில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு எங்கும் ஓடி வருவாரே அவர்தான் விஜி. அன்று தொடங்கிய இவரது திரைப்யணம் சில படங்களில் நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய‌ ஆரோஹணம் திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலால் அந்த கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இருப்பார்.

   

அந்தபடம் விருது பெற்றது. தற்போது இவரது மகள், லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பு, திரைப்படம் இயக்கம் என பன்முக திறமைகளை கொண்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்’.

   

 

பசங்க கிஷோர் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக நடித்திருக்கிறார். லவ்லின், மும்பையிலுள்ள அனுபம் கேர் சினிமாப் பள்ளியில் நடிப்புக் கலையைப் பயின்றுள்ளார். தற்போது துபாயில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

லவ்லின் கதாநாயகியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் உள்ளிட்ட இதர தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.