தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்… புதிய அரசாணையை வெளியிட்ட முதல்வர்..!!

By Soundarya on வைகாசி 10, 2026

Spread the love

தமிழக அரசு மின்சாரக் கட்டணச் சலுகை குறித்த புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு மின் இணைப்புகளைப் பொறுத்தவரை, பயனாளர்களின் பயன்பாட்டு அளவைப் பொறுத்து இந்தச் சலுகை கணக்கிடப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பாக, 500 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்டுகள் வரை இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட்டுகள் மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு மீதமுள்ள பயன்பாட்டிற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அறிவிப்பு தமிழக மின் நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியையும் பயன்களையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.