சிறுவர்களை கவரும் தீபாவளி துப்பாக்கி…..! அதுக்குள்ள வைக்கிற ரோல் எப்படி பண்றாங்க தெரியுமா?….. நீங்களே பாருங்க….

By Archana on ஐப்பசி 18, 2022

Spread the love

தீபாவளி என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது பட்டாசு தான். தீபாவளி தினத்தன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு விரும்பி வெடித்து மகிழ்வார்கள். ஆன்மிக காரணமாக காமம், குரோதம், கோபம், மோகம், ஆச்சரியங்கள் போன்ற தீய குணங்கள் இறைவனின் திருநாமங்களால் தூள் தூளாக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் தான் பட்டாசு வெடித்து நாம் மகிழ்கிறோம்.

   

தீபாவளி தினத்தன்று புத்தாடை, எண்ணெய் தேய்த்துக் குளித்து, தீப ஒளி வழிபாடு போன்ற பல விஷயங்கள் தீபாவளிக்கான பாரம்பரிய விஷயங்களாக பார்க்கப்படுகின்றது. அந்த வரிசையில் தான் தீபாவளி தினத்தின் முக்கியமானதாக பட்டாசு வெடிப்பதும் உள்ளது. தற்போது சூழல் மாசுபடும் என்ற பெயரில் பட்டாசு வெடிக்க கூடாது என்று தெரிவித்து வருகின்றன.

   

 

90’ஸ் கிட்ஸ்களில் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த பட்டாசு எது என்று கேட்டால் அது துப்பாக்கியில் அந்த ரோலை போட்டு சுடுவது தான். இதை தற்போது வரை பயன்படுத்தி வருகின்றனர். சிறு குழந்தைகளுக்கு இந்த துப்பாக்கி பட்டாசு மிகவும் பிடிக்கும். இந்த பட்டாசு வெடிக்கும் போது அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சி பிறக்கின்றது. இந்த துப்பாக்கி பட்டாசிக்கான ரோல் எப்படி செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்து உள்ளீர்களா? இதனை எப்படி தயார் செய்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோ இதோ உங்களுக்காக…