குணமடைந்த தாயும், பார்வையற்ற மகனையும் பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற அரசு ஊழியர்கள் : பின் நேர்ந்த கதி..!

By Archana

Published on:

பர்கூர் கொரோனா வார்டில் சிகிச்சை மேற்கொண்டுவந்த கண் தெரியாதவரை சாலையோரம் கொரோனா தடுப்பு ஊழியர்கள் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிர அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியை சேர்தவர் சினிவாசன் இவருக்கு கண் தெரியாத நிலையில் கொரேனா பெரும் தெற்றுக்கு ஆளான இவர்,

   

கடந்த மாதம் பர்கூர் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் அவர் குணமடைந்ததால்,

அங்கு இருந்த ஊழியர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு சென்றுவிடாமல் கிருஷ்ணகிரி பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிட்டு,விட்டு அங்கு இருந்து சென்று உள்ளனர்.

கண் தெரியாத சீனிவாசன் தனது வயதான தாயாடுடன் எங்கேயும் செல்ல முடியாமல் ஒருநாள் முழுவதும் அங்கே தவித்து வந்துள்ளனர்,

இதனை கண்ட அறம் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கோபிநாத் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவருக்கு தேவையான உணவுகளை வழங்கி உதவி செய்ததோடு இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

பின்னர் உடனடியாக ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டதை அடுத்து பேருந்துநிலையத்தில் தவித்து வந்த இருவரையும் மீட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

author avatar
Archana