Categories: சினிமா

காஜல், அனுஷ்கா, தமன்னாவைத் தொடர்ந்து அண்ணன்-தம்பிக்கு ஹீரோயினாகப் போகும் அதிதி ஷங்கர்

Spread the love

தமிழ் சினிமாவில் சூர்யா-கார்த்தி ஆகிய இருவருக்குமே ஜோடியாக நடித்த நடிகைகள் அனுஷ்கா மற்றும் காஜல் அகர்வால். இதில் சூர்யாவுடன் அனுஷ்கா சிங்கம் படத்திலும், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் படத்திலும் நடித்தார். அதேபோல் காஜல் அகர்வால் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும், கார்த்திக்கு ஆல்இன்ஆல் அழகுராஜா படத்திலும் ஹீரோயினாக நடித்தார். மேலும் தமன்னா அயன் படத்தில் சூர்யாவுக்கும், பையா படத்தில் கார்த்திக்கும் ஹீரோயினாக நடித்தார். மேலும் இந்த வரிசையில் சாயிஷா, ரகுல் பிரீத்திசிங் ஆகியோரும் அடங்குவர்.

தற்போது இதோபோல் நடிகை அதிதிஷங்கரும் இணைய உள்ளார். டைரக்டர் ஷங்கரோ தனது மகளை டாக்டருக்குப் படிக்க வைத்து விட்டு மருத்துவர் ஆவார் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் திடீரென சினிமா பக்கம் திரும்பினார் அதிதி. அவர் தனது முதல்படமான விருமனில் கிராமத்துப் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். முத்தையா இயக்கிய இப்படத்தினை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. யுவனின் இசையில் அமைந்த இப்படத்தில் பாடல் ஒன்றையும் பாடியிருந்தார் அதிதி.

விருமன் பட வெற்றிக்குப் பின் மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். இப்படத்திலும் ஒரு பாடலைப் பாடியிருந்தார். பின் சக்தி மசாலா உள்ளிட்ட விளம்பரப் படங்களில் பாடியும், நடித்தும் இருந்தார்.

கேப்டன் குடும்பம் வைத்த கோரிக்கை.. விஜயகாந்த் மகனுடன் நடிக்கப்போகும் லாரன்ஸ்.. அவரே வெளியிட்ட வீடியோ..

தற்போது அதர்வாவின் சகோதரர் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் நாயகியாக நடித்து வரும் அதிதி ஷங்கர் அதன் பிறகு சூர்யாவுடன் இணையவுள்ளார்.தற்போது சூர்யா கங்குவா, வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன்பின் சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சூரரைப் போற்று வெற்றிக்குப் பின் மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் இணையும் இந்தக் கூட்டணியில் தற்போது அதிதி ஷங்கரும் இணைந்துள்ள இப்படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். பீரியட் படமாக உருவாகும் புறநானூறு சூரரைப் போற்று படம் போன்று வலுவான திரைக்கதை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

4 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

4 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

6 மணத்தியாலங்கள் ago