எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க…..! அந்தரத்தில் பறந்த திருமண ஜோடிகள்…. செம வைரலாகும் வீடியோ

By Archana on கார்த்திகை 1, 2022

Spread the love

அந்தரத்தில் பறக்கும் படி திருமண போட்டோ ஷூட் எடுத்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. திருமணங்கள் என்றாலே தற்போது போட்டோ சூட் என்பது முக்கியமாகிவிட்டது, திருமணத்திற்கு முன்பாக ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் என்றும் திருமணத்திற்கு பிறகு போட்டோஷூட் என மணமக்கள் வித்தியாச வித்தியாசமாக போட்டோஷூட் எடுத்து கலக்கி வருகிறார்கள்.

   

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து வளம் வந்து தான் உள்ளது. திருமணத்திற்காக தற்போது ஒரு தம்பதிகள் எடுத்த போட்டோ சூட் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தம்பதிகள் இருவரையும் கார் மேலே அந்தரத்தில் பறக்க வைத்து போட்டோ சூட் எடுத்துள்ளனர். இதை பார்க்கும் போது ஏதோ ஒரு திரைப்படத்தின் சண்டைக் காட்சி போல் இருந்தது .

   

 

போட்டோகிராபர் வேற லெவலில் யோசித்து இதுபோன்று போட்டோ சூட் எடுத்துள்ளார் என்று அனைவரும் கூறி வருகின்றனர். எது எப்படியோ இது பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது. ஆனால் இந்த போட்டோ சூட் ஆபத்தானது, இப்படி எடுக்கும் போது இருவரில் யாராவது கீழே விழுந்தால் அவர்கள் பலத்த காயம் ஏற்படலாம். இதெல்லாம் புரிந்து கொள்ளாமல் மணமக்கள் இதுபோன்ற விபரீதமான போட்டோ சூட்டுகளை எடுத்து வருகிறார்கள்.