2026 பாகிஸ்ஷதான் சூப்பர் லீக் (PSL) போட்டியின் போது, லாகூர் கலாண்டர்ஸ் அணியின் கேப்டன் அப்ரிடி எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த அவர், மைதானத்தை விட்டு வெளியேறும்போது தனது பேட்டை தரையில் ஓங்கி அடித்து உடைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷாஹீனின் இந்தச் செயலைக் கண்ட ரசிகர்கள், “இருந்த ஒரு பேட்டையும் உடைத்துவிட்டாரே” (Ek hi bat tha, woh bhi tod diya) என்று சமூக வலைதளங்களில் அவரை நகைச்சுவையாக விமர்சித்து வருகின்றனர். கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவர் எதிர்கொள்ளும் அழுத்தம் தான் இத்தகைய கோபத்திற்கு காரணம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Shaheen Shah Afridi broke his bat after getting out for duck 🦆. #LHQVQTG pic.twitter.com/DYzLMCFe9f
— Nibraz Ramzan (@nibraz88cricket) April 17, 2026
ஷாஹீன் அப்ரிடி ஒரு பந்துவீச்சாளராக அறியப்பட்டாலும், சமீபகாலமாக தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க மிகவும் முயற்சி செய்து வருகிறார். இந்தப் போட்டியில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லத் தவறிய விரக்தியே அவரை இவ்வாறு செய்யத் தூண்டியதாகக் கருதப்படுகிறது. எனினும், ஒரு கேப்டனாக அவர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
