விருது விழாவிற்கு முதன்முறையாக தனது மனைவியை அழைத்து வந்த தொகுப்பாளர் ரக்சன் !! அழகான ஜோடி இதோ !!

By Archana

Published on:

விஜய் தொலைக்காட்சியில் வளர்ந்து வரும் தொகுப்பாளர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் ஒருவர் தான் ரக்ஷன், இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களால் அறியப்பட்டார்.

அதன்பிறகு சின்ன நிகழ்ச்சிகளில் வந்த அவருக்கு குக் வித் கோமாளி என்கிற புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார்.

   

இந்நிகழ்ச்சியின் மூலம் தான் ரக்ஷனின் சொந்த விஷயம் பற்றி தகவல் வந்தது. அதாவது இதுவரை நாம் ரக்ஷனுக்கு திருமணம் நடக்கவில்லை என்று தான் நினைத்தோம்.

ஆனால் அவருக்கு உண்மையில் திருமணம் முடிந்து குழந்தையே உள்ளதாம். அவரது மனைவி அதிகம் கேமரா பக்கம் வர விரும்பாதவர் என்பதால் இந்த விஷயத்தை வெளியே கூறவில்லையாம்.

இந்த நிலையில் தொகுப்பாளர் ரக்ஷன் தனது மனைவியுடன் முதல்முறையாக விஜய் டெலி விருதிற்கு வந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana