மூன்று தலைமுறைகளாக வயலில் எலி பிடித்து வாழும் குடும்பம்… அவர்களே கண்டுபிடித்த தொழில்நுட்பத்தில் எவ்வளவு எலி மாட்டிருக்குன்னு பாருங்க..

என்ன தான் விஞ்ஞானம் விஸ்வரூப வளர்ச்சி அடைந்தாலும், விவசாயத்தில் பாரம்பர்ய முறையிலான தொழில்நுட்பங்களுக்கு மவுசே தனி தான். அந்த வகையில் வயல்காட்டில் விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக இருப்பதே எலிதான். அதனை ஒழிக்க செய்யும் ஒருவரின் வீடியோ யூடியூப்பில் வைரலாகி வருகிறது. நெல் விவசாயிகளுக்கு பெரிய தொல்லையாக இருப்பதே எலிதான். வயல்களில் ஒளித்திருக்கும் எலி, நெல் விளைந்ததும் வேட்டையாடத் துவங்கிவிடும்.

வயலில் கிடக்கும் பாம்ம்புகள் எலியை தின்றாலும், எலிகளின் எண்ணிக்கை ரொம்பவும் அதிகம் தான். எலியை கட்டுப்படுத்தவே இன்று கடைகளில் ரசாயன மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் அந்த சிக்கலே இல்லாமல் முன்பெல்லாம் விவசாயிகள் வயலில் எலிபொறி வைத்து எலிகளைப் பிடித்தனர். ஆனால் இன்று விவசாயமும் நவீனமாகி வருவதால் எலியை, கொல்லவும் ரசாயனப் பயன்பாடே அதிகரித்து விட்டது.

ஆனால் இந்த காலத்திலும் கடந்த மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பம் வ்யக்காட்டில் பாரம்பர்ய முறையில் எலிபொறி வைத்து எலியை பிடித்துவருகின்றது. மூன்றாவது தலைமுறையாக இந்த பணியை சக்கரநாடன் என்பவர் செய்துவருகின்றார். அவர் இதுகுறித்து கூறும்போது, ‘வயக்காட்டில் விவசாயிகளின் நன்மைக்காக இதை செய்கிறோம். எங்களின் குடும்ப தொழிலே இதுதான். மூன்றாம் தலைமுறையாக இதை நான் செய்கிறேன். கைத்தொழிலில் இதற்கான பொறியை நாங்களே செய்வோம். ஒரு வயலில் ஒரு தடவை வைச்சா 30, 40 எலிகூட மாட்டும்.’’என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *