முன்னாள் மத்திய அமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா காலமானார்… பிரதமர் மோடி இரங்கல்..!!

By Soundarya on தை 7, 2026

Spread the love

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபீந்திர புர்காயஸ்தா (94), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றி வளர்வதற்கு மிக முக்கியத் தூணாகத் திகழ்ந்த இவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கபீந்திர புர்காயஸ்தாவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், புர்காயஸ்தாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும், சமூகத்திற்கும் தேசத்திற்கும் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புடன் கூடிய சேவை என்றும் நினைவுகூரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அசாம் அரசியலில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.