மாமனாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்..! – இறுதியில் நேர்ந்த பேரதிர்ச்சி..!

By Archana

Published on:

இந்தியாவில் கோரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை மருமகள் முதுகில் சுமந்து மருத்துவமனையில் சேர்த்துள்ள புகைப்படம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்த சூரஜ் என்பவர் வேலை காரணமாக வெளியூரில் தங்கியுள்ளார். அவரது மனைவி நிகாரிகாவும், சூரஜின் 75 வயது தந்தை துலேஸ்வர் தாஸ் மட்டும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.

   

சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் துலேவஸ் தாஸிற்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்ட நிகாரிகா எந்த வண்டியையும் எதிர்பார்க்காமல் வயதான மாமனாரை முதுகில் சுமந்தபடியே மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, பலரும் நிகாரிகாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதில் சோகமான செய்தி என்னவெனில், நிகாரிகாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
Archana