பிரித்தானியாவில் மீனவரின் கண்ணில் பட்ட அதிர்ஷ்டத்தை கொடுக்கும் நீல நிற லாப்ஸ்டர்! அரிய வகை புகைப்படம்

பிரித்தானியாவில் மீனவர் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அரிய வகை நீல நிற லாப்ஸ்டர் பிடிபட்ட நிலையில், அதை மீண்டும் கடலுக்குள்ளே விட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Newlyn பகுதியைச் சேர்ந்தவர் Tom Lambourn(25). இவர் கடற்கரை நகரமான Penzance-ல் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு நீளமான மிகவும் அரிதான நீல நிற லாப்ஸ்டர் கிடைத்துள்ளது.

இது போன்ற நீல நிற லாப்ஸ்டர்கள் மிகவும் அரிதான அரிது என்பதால், இதை Tom Lambourn புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் கடலுக்கடியிலே விட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இது என்னுடைய இரண்டாவது மீன்பிடி காலம். இதை பார்த்ததால், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். நான் அது எவ்வளவு நீளம் என்பதை பார்ப்பதற்காக அளந்தேன், இதை வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

இது மிகவும் பெரிதாக இருந்ததிருந்தால், நான் அதை உடனடியாக National Hatchery-க்கு அனுப்பியிருப்பேன். National Hatchery-ல் இருக்கும் அதிகாரிகளுக்கு இந்த லாப்ஸ்டர் புகைப்படங்களை அனுப்பினேன்.

அவர்கள் இது போன்ற லாப்ஸ்டர்கள் மிகவும் அரிதானவை, மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், National Lobster Hatchery செய்தி தொடர்பாள ஒருவர் கூறுகையில், இது ஒரு மிக அரிதான வண்ண உருவமாகும்.

இதனால், Tom Lambourn அதன் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பியபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம். லாப்ஸ்டர்கள் நிலத்திற்கு கொண்டு வர மிகவும் சிறியதாக இருந்தது, அதனால் மீண்டும் கடலில் விடப்பட்டது.

இதனால் அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறினார். கடந்த 2005-ஆம் ஆண்டு, University of Connecticut-ன் பேராசிரியர் Ronald Christensen, மரபணு குறைபாட்டின் விளைவாக இது போன்ற நீல நிறத்தை லாப்ஸ்டர் பெறுவதாக கண்டுபிடிப்பதார்.

இது போன்ற நீல நிற லாப்ஸ்டர் மீனவர்கள் பார்த்தால், அதை அவர்கள் நல்ல அதிர்ஷ்டத்திற்கான அறிகுறி என்று நம்புகின்றனர், இதன் காரணமாகவே அதை சாப்பிடுவதில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *