NEWS
பாட்டும் நானே பாவமும் நானே பாடலை பாடி பட்டய கிளப்பிய குட்டிக்குழந்தை! வைரலாகிவரும் காணொளி
இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான்.குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும்.அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.
சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற, பாட்டும் நானே பாவமும் நானே..என்னும் பாடலை செவ்வாலியே சிவாஜி கணேசனின் உடல்மொழியோடு பாடி குழந்தை ஒன்று அசத்துகிறது.
அதிலும் குழந்தைகள் பொதுவாக இந்த காலத்து நடிகர், நடிகைகளின் பாடல்களை மனதில் வைத்து அச்சுபிசராமல் பாடுவது வழக்கமானதுதான். ஆனால் இந்தக் குழந்தை சிவாஜி கணேசன் பாடலை அச்சுபிசராமல் பாடி கவனம் குவித்துள்ளது