பசிக்கு மீன் உணவு வாங்கிய ஏழை பெண்ணுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடிபதி!!

தாய்லாந்தில் ஏழை பெண் ஒருவருக்கு கடல் உணவில் இருந்து கோடிகள் மதிப்பு கொண்ட அரியவகை முத்து கிடைத்துள்ளதை அடுத்து அவர் ஒரே நாளில் கோடிபதியாகியுள்ளார். தாய்லாந்தின் சாதுன் மாகாணத்தை சேர்ந்தவர் Kodchakorn Tantiwiwatkul. ஏழையான இவர் ஜனவரி 30 அன்று இரவு உணவுக்காக சுமார் 160 ரூபாய் மதிப்பிலான கடல் நத்தைகளை வாங்கியுள்ளார்.

மீன் சந்தையில் இருந்து வீடு திரும்பிய அவர், கடல் நத்தைகளை உணவுக்காக சுத்தம் செய்யும் பொருட்டு, ஒவ்வொன்றையும் இரண்டாக பிளந்துள்ளார். அதில் ஒன்றில் ஆரஞ்சு வண்ணத்தில் கோலி ஒன்று இருப்பதை கண்டுள்ளார். ஆனால் அது கல்லாக இருக்கலாம் என கருதியவருக்கு, உண்மையில் அது 6 கிராம் எடை கொண்ட ஆரஞ்சு மெலோ முத்து என்பது தெரிய வந்தது.

தற்போது அந்த முத்தை உரிய விலைக்கு விற்கும் முடிவில் உள்ளார் அவர். அதன் தரத்தை சோதித்து, கோடிகள் வரை விலை கிடைக்கலாம் என்றே கூறப்படுகிறது. பொதுவாக, உயர் தர மெலோ முத்து வகைகளுக்கு கோடிகள் மதிப்பு உண்டு என கூறப்படுகிறது.

Kodchakorn-ன் தந்தை விபத்தில் சிக்கியிருக்கும் நிலையில், அவரது மனைவியும் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வருவதால் பணத்திற்கு அதிக தேவை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *