நடிகை நதியா பகிர்ந்த 20 வயது மகளின் அழகிய புகைப்படம்! அப்படியே அம்மா மாறியே இருக்காங்களே! கிரங்கிப் போன தமிழ் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சில நடிகைகளை பார்க்கும்போதுதான் இவர்களுக்கெல்லாம் வயதே ஆகாதா என்று கேட்கத் தோன்றும். அந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நதியா. தனது துறுதுறு நடிப்பினால் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் இன்றும் தனது உடலைப் அப்படியே பராமரித்து வருகிறார். வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான போதிலும் இன்றும் அவர் இளமையாகவே இருக்கிறார் எனபது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

இந்நிலையில் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு சின்னதம்பி பெரியதம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்து வந்தவர் 1988 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த படமும் வேற லெவல் ஹிட்டடிக்க அதன் பிறகு அவரை பல படங்களில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இளமையின் சொந்தக்காரியான நதியாவின் தனது 20 வயதாகும் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *