நடிகர் ரஜினிக்கு மகனாக நடித்துள்ள ரித்திக் ரோஷன்? எந்த திரைப்படம் தெரியுமா? வைரலாகும் படத்தின் வீடியோ இதோ..!!

By Archana on ஆகஸ்ட் 17, 2021

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் பல இந்திப் படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மையாகும். அப்படியே நடிகர் ரஜினிகாந்த் நடித்த படத்தில் அவருக்கு மகனாக ரித்திக் ரோஷன் நடித்து  உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு வருகிறது.

   

1980 முதல் 90 வரை ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த காலகட்டம் அது. அப்போது ரஜினிக்கே தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்து கொண்டு வந்தது.

   

 

நடிகர் ரஜினிகாந்த் ஹிந்தியிலும் சில படங்கள் நடித்துள்ளார். மேலும் இன்று ஹிந்தி சினிமாவில் முன்னணியில் இருக்கும் பல நடிகர்கள் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். அந்த வகையில் 1986ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஹிந்தியில் உருவான திரைப்படம் பகவான் தாதா.

நடிகர் ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் ரஜினிகாந்தின் மகனாக இன்று ஹிந்தி சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரித்திக் ரோஷன் நடித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக கொண்டு வருகிறது.

இந்த படம் வந்து கிட்டதட்ட 25 வருடம் கழித்து இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் ரஜினி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பகவான் தாதா படத்தில் நடித்த போது ரஜினி தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்திய சினிமாவை பொறுத்த வரை நடிகர் ரஜினி, கமல் என பலரும் நடித்திருந்தாலும் இன்று வரை அங்கு நடக்கும் சில சதியால் பல தமிழ் நடிகர்கள் அங்கே சாதிக்க முடியாமல் போனது மறக்க கூடாத ஒன்றாகும்…இதோ நீங்களே வீடியோவை பாருங்கள் …..