தெய்வத்திருமகள் படத்தில் நடித்த குழந்தை சாரா இப்படி மடமடவென வளர்ந்துவிட்டாரே.! வைரலாகும் புகைப்படம்

By Archana

Published on:

இயக்குனர் ஏ எல் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தெய்வத்திருமகள், இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. படத்தில் விக்ரம் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவாக நடித்து இருந்தார்.

   

விக்ரமின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது அதன்பிறகு படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சாரா, இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தை தொடர்ந்து சைவம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு திரைப்படத்திலும் மழலை நடிப்பை வெளிப்படுத்தி தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் சாரா நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களும் ரசிக்கும் படி அமைந்தது, அதனால் அந்த படத்தில் நடித்ததற்காக அந்த வருட சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றார், அதனைத் தொடர்ந்து படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால் அவ்வப்போது சமூகவலைதளத்தில் அடிக்கடி எதையாவது பதிவிட்டு வருவார் இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது தந்தை மற்றும் தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடித்த சாரா எப்படி மடமடவென வளர்ந்து விட்டது என கூறி வருகிறார்கள்.

author avatar
Archana