திருமணமான பெண்கள் கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்..! என்னென்னெ தெரியுமா..?

By Archana

Updated on:

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒருவரின் வாழ்க்கையை எடுத்துவிட்டால், திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என்று பிரித்துவிடலாம்.

அந்தளவிற்கு மனிதனின் வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பின்பு அவர்களின் முந்தைய வாழ்க்கை போன்று இருக்காது.

   

இதுவரை வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இருந்து மாறி புதிதாக வேறொரு சூழ்நிலையில் வாழ தொடங்க வேண்டும். அதிலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் அவர்களின் நிலை மேலும் கஷ்டமாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் எவ்வளவு மகிழ்ச்சியான திருமண வாழ்வை பெண்கள் அனுபவித்தாலும் சில ரகசியங்களை ஒருபோதும் தங்கள் கணவரிடம் கூறமாட்டார்கள்.

இதுகுறித்து பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளது.

அதைப் பற்றிய இங்கு பார்ப்போம்.

பழைய காதலன்
என்ன தான் ஒரு பெண்ணுக்கு தான் நினைததை விட ஒரு அழகான மாப்பிள்ளை, தன்னை கண்கலங்காமல் பார்த்து கொள்ளும் கணவன் அமைந்துவிட்டாலும், அவர்கள் தங்கள் கணவரை தங்களின் முன்னால் காதலனுடன் ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் இருக்கும்.

இது அவர்களின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று அவர்கள் அறிந்தாலும் அவர்கள் இதனை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதனை ஒருபோதும் அவர்கள் தங்கள் கணவரிடம் தெரிவிக்க மாட்டார்கள்.

கணவரின் பெற்றோர்
திருமணம் முடிந்த பின் மாமியார் மருமகன் பிரச்சனை இருக்கிறதோ, இல்லையோ, நிச்சயமாக மாமியார், மருமகள் பிரச்சனை எதாவது ஒரு இடத்தில் வந்துவிடும்.

இருப்பினும் அதை எல்லாம் வெளிக்காட்டாமல், தங்கள் மாமியாரின் மீது கோபம் இருந்தாலும் அதனை மறைத்து ஒரே குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்வது போல நடித்து வாழ்ந்து வருகின்றனர்.

வேலை
வேலைக்குச் செல்வது என்பது அனைத்து பெண்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பராமரிக்கவும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் பெரும்பாலான பெண்கள் தங்கள் கேரியரை இழக்கிறார்கள்.

இதனால் அவர்கள் மனதளவில் வருந்தினாலும் குடும்பத்திற்காக அதனை வெளிக்காட்டுவதில்லை. இது குறித்து அவர்கள் கணவரிடம் இருந்து மறைத்து விடுகிறார்கள்.

நெருங்கிய உறவில் சலிப்பு
இந்தியாவில் பத்தில் ஆறு பெண்கள் மட்டுமே உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடைகிறார்கள்.

மற்ற பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடைவதில்லை. பெண்களின் உச்சக்கட்டம் என்பது ஆண்களின் உச்சக்கட்டத்தை போன்றதல்ல.

தங்களின் உச்சக்கட்டம் பற்றியோ அல்லது கணவரின் பாலியல் திறனை பற்றியோ பெண்கள் கணவரிடம் வெளிப்படையாகக் கூறுவதில்லை. தங்களின் பாலியல் ஆசைகள் பற்றியும் பெண்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதில்லை.

author avatar
Archana