Connect with us

Tamizhanmedia.net

தனக்கு பரிசாக வந்த காரை நடராஜன் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

NEWS

தனக்கு பரிசாக வந்த காரை நடராஜன் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தனக்கு பரிசாக வந்த காரை, அப்படியே பயிற்சியாளருக்கு பரிசாக கொடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, வலைப் பயிற்சி பந்து வீச்சாளராக சென்ற தமிழக வீரர் நடராஜன், தன்னுடைய அபார பந்து வீச்சு மூலம், இந்திய அணியில் இடம் பிடித்து, அனைவரது கவனத்தை பெற்றார்.

அதுமட்டுமின்றி இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாட்டால் அந்த அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரையும் அசத்தலாக இந்திய அணி கைப்பற்றியது. அப்போது இந்திய அணியில் இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, சுப்மன் கில், சிராஜ் ஆகியோர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக முதன்முறையாக அறிமுகம் ஆகி இருந்தனர்.

இதனால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மஹிந்திரா இந்த அவுஸ்திரேலிய தொடரில் அறிமுகமான அனைத்து இளம் வீரர்களுக்கும் மஹிந்திரா தார் என்கிற ஒரு காரை பரிசாக அளிப்பதாக அறிவித்திருந்தார்.

குடும்ப கஷ்டத்தில் வறுமையில் வாடிய நடராஜனை அழைத்து கிரிக்கெட் பயிற்சி கொடுத்து இவ்வளவு தூரம் முன்னேற்றிய ஜெயபிரகாஷ் செய்த நன்றியை மறக்காமல் என்றும் நினைவுகூரும் நடராஜன் இன்றளவும் அவரின் மீது மதிப்பு குறையாமல் தனக்கு கிடைத்த காரை அவருக்குப் பரிசாக அளித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top