சினிமாவுக்கும் முன்பே சீரியலில் நடித்த யோகிபாபு… எப்படி இருக்காருன்னு பாருங்க… யோகிபாபுவா இது? எவ்வளவு ஒல்லியா இருக்காருன்னு பாருங்க..!

செந்தில்_கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், புரோட்டா சூரி என தமிழ்த்திரையுலகில் காமெடியில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவர் கோலோச்சுவர். அந்த வகையில் இது யோகி பாபுவின் காலம்! யாமிருக்க பயமேன் படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்னும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதன் பின்னர் வெளியாகும் படங்களில் எல்லாம் திரையரங்கில் அவர் முகம் தெரிந்தாலே, ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போய்விடுகின்றனர்.

இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. அண்மையில் அஜித் நடிப்பில் சக்கைப்போடு போட்ட விஸ்வாசத்திலும் யோகி பாபு நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் அவரது நடிப்பில் 20 படங்கள் வந்தன. ஒருபக்கம் பக்காவான நகைச்சுவை ரோலில் நடிக்கும் யோகிபாபு, மற்றொருபுறம் பரியேறும் பெருமாள் போன்ற கலை, சமூக அக்கறை தாங்கிய படத்திலும் நாயகனுடன் படம் முழுவதும் ஜார்னி செய்திருப்பார்.

தர்மபிரபு படம் அவரை ஹீரோவாக ப்ரமோஷன் கொடுத்தது. இப்போது மண்டேலா என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே யோகிபாபு, லொள்ளு சபாவில் நடித்துள்ளார். ஆனால் அதற்கும் முன்பே ‘மை நேம் இஸ் மங்கம்மா’ என்னும் சீரியலில் நடித்திருக்கிறார் யோகிபாபு. அதில் இருந்துதான் அவரது கலையுலகப் பயணம் ஆரம்பமானது. அந்த சீரியலில் கூட்டத்தில் ஒருவராக யோகிபாபு நிற்கும் படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *