குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி சில சீக்ரெட்டை சொன்ன தாமு- FINAL நிகழ்ச்சியில் செம விஷயம் இருக்கு…3வது சீசன் எப்போது தொடங்குகிறது தெரியுமா..?

By Archana

Published on:

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பல வாரங்களை கடந்துவிட்டது. இப்போது நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது மட்டும் தான் இன்னும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

   

மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பேவரெட் போட்டியாளர்கள் உள்ளார்கள், ஆனால் ஜெயித்தது யார் என்பது தெரியவில்லை. நமக்கு கிடைத்த தகவல்படி குக் வித் கோமாளி 2வது சீசனின் வெற்றியாளர் கனி என கூறப்படுகிறது. அடுத்து ஷகீலா, அதற்கு அடுத்து அஷ்வின் விருது பெற்றுள்ளார். வெற்றியாளரை அறிவிக்க சிம்பு ஸ்பெஷல் விருந்திராக வந்துள்ளார்.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான தாமு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், இறுதி நிகழ்ச்சி உங்களை சந்தோஷப்படுத்தும் அளவிற்கு இருக்கும். அதிகாலை 3 மணிக்கு படப்பிடிப்பும் முடிந்தும் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. இந்த நிலையில் யார் ஜெயிப்பார்கள் என்று பார்ப்பதை தாண்டி ரசிகர்களுக்கு நிகழ்ச்சி முடிந்துவிட்டதே என்கிற பெரிய சோகம் தான் அதிகம் உள்ளது.

இந்த நிலையில் தான் Chef Damu கொடுத்த ஒரு பேட்டி சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அதாவது குக் வித் கோமாளியின் 3வது சீசன் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்க உள்ளதாம். அதோடு 3வது சீசனில் கோமாளிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.

author avatar
Archana