VIDEOS
கஷ்டப்பட்டு தன்னை பெரியாளாக்கிய அம்மா,அப்பாக்கு… வேற லெவலில் நன்றிக்கடன் செய்த மகள்.. உருகவைக்கும் காட்சி..!
ஆட்டோக்காரரின் மகள் ஒருவர் செய்த செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? அதுதொடர்பாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சாதிக்க வறுமை தடையே இல்லை என்பார்கள். அதை மெய்பிக்கும் வகையில் மிகவும் கஷ்டமான சூழலில் வாழும் பலரும் தங்கள் திறனை வெளிப்படுத்தி முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு இங்கேயும் ஒரு சம்பவம் உதாரணம் ஆகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த்ச் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் மகள் மான்யா. தன் கஷ்டமான பொருளாதார சூழலுக்கு மத்தியிலும் அவருக்கு சாதிக்கும் ஆர்வம் அதிகம். அதேநேரம் அவரது பொருளாதார சூழலால் காலையில் கல்விக்கூடம் செல்லும் மான்யா, மாலையில் பக்கத்து வீடுகளில் வேலைக்குப் போனார்.
ஆனால் இத்தனை கஷ்டத்துக்கு மத்தியிலும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கெடுத்து இரண்டாம் இடம் பெற்று இருக்கிறார். இதனை ஒட்டி இவர் படித்த கல்லூரியில் விழா எடுத்தனர். இதற்கு தந்தையின் ஆட்டோவிலேயே வந்து இறங்கிய மான்யா, தான் பெற்ற கிரீடத்தை தன் அப்பா, அம்மாவுக்கு மாறி, மாறி வைத்து அழகுபார்த்தார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்..