“எங்க ஷூட்டிங் சாப்பாடு இப்படிதான் இருக்கும்”…. வீடியோவை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா…

By Archana

Published on:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

   

இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹேமா. இவர் நடிப்பையும் தாண்டி இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். சொந்தமாக ஒரு youtube சேனலை நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி நிறைய விஷயங்களை பதிவு செய்வார்.

அவ்வகையில் தற்போது ஹேமா சூட்டிங் ஸ்பாட்டில் கொடுக்கும் உணவுகள் இப்படித்தான் இருக்கும் என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

author avatar
Archana