அடிக்குற வெயிலில் இருந்து தப்பிக்க இவரோட டெக்னிக் தான் சரி.. என்னமா யோசிச்சு இருக்காரு பாருங்க…!

By Archana

Published on:

கோடை வெயிலின் உக்கிரம் பயமுறுத்துகிறது. வீட்டை விட்டு வெளியேவே செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்த கோடை பச்சிளம் குழந்தைகள், வளரிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்களை வெகுவாக பாதிக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தில் கோடையில் சிறுநீர் செல்ல வேண்டும். அப்போது தான் நாம் ஆரோக்கியமான அளவுக்கு தண்ணீர் குடிக்கிறோம் என்பது தெரியும். நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதே ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.இதேபோல் கோடை வெயிலை சமாளிக்க வெள்ளரி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

   

ஆனால் இதையெல்லாம் மீறி, இங்கே ஒருவர் வெயிலை சமாளிக்கச் செய்த யுக்தி வேற லெவலில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? வயலுக்கு பூச்சி மருந்து அடிக்கும் ஸ்பிரேயரை தன் முதுகில் மாட்டியிருக்கிறார்.

அதன் ஸ்பிரே மூலம் தண்ணீர் வெளியே வரும் பகுதியை தன் தலைக்கு மேல் மாட்டியிருக்கும் இவர், நடக்க, நடக்க தன் கையால் ஸ்பிரே செய்து, தன் தலையிலேயே தண்ணீர் பாயச் செய்கிறார். அடேங்கப்பா கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு டெக்னிக்கா? என இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana