#image_title
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன் உள்ளிட்டார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. கோட் திரைப்படத்தில் விஜய் அப்பா மகன் என இரு பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் ஆனது. அந்த பாடலுக்கு ஸ்பார்க் என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். ஸ்பார்க் பாடலை யுவன் சங்கர் ராஜாவும், விருஷா பாலுவும் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார்.
வீடியோவுக்கு நடுவே விஜயின் தோற்றம் அனிமேஷன் பொம்மை போல காட்டப்பட்டுள்ளது இந்த நிலையில் ஸ்பார்க் பாடல் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. நெகட்டிவ் கமெண்ட் அதிகமாக வந்துள்ளதாம். இதனால் யுவன் சங்கர் ராஜா அப்செட்டில் உள்ளாராம். மறுபுறம் படத்தின் ஹீரோவான விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் முழு படத்தையும் பார்த்துவிட்டாராம் படம் முழுவதும் அருமையாக உள்ளதாம்.
அதிலும் பெண்களை கவரும் விதமாக படம் அமைந்துள்ளது. இதனால் தளபதி விஜய் சந்தோஷமாக உள்ளாராம். இது மட்டும் இல்லாமல் அர்ச்சனா கல்பாத்தியும் அவரது குடும்பத்தினர் அனைவரும் படத்தை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது என கூறியதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…