#image_title
இசைஞானி இளையராஜாவுக்குப் பிறகு அவரது குடும்பத்தில் இருந்து கார்த்திக் ராஜா, பவதாரணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்தனர். இதில் கார்த்திக் ராஜாவுக்கு எல்லா திறமைகளும் இருந்தும் அவரால் முன்னணி இசையமைப்பாளராக வரமுடியவில்லை. பவதாரணி பாடகியாக பல பாடல்களை பாடியுள்ளார்.
ஆனால் இளையராஜாவின் வழியில் வெற்றிகரமான இசையமைப்பாளராக ஜொலித்து வருபவர் அவரின் கடைசி மகனான யுவன் ஷங்கர் ராஜாதான். அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், தற்போது கோட் படம் வரை நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர் யுவன் ஷங்கர் ராஜாதான். தன்னுடைய 16 ஆவது வயதில் பள்ளி மாணவனாக இருக்கும்போதே அவர் அரவிந்தன் படத்துக்கு இசையமைத்தார். ஆனால் அவரை ஒரு இசையமைப்பாளராக அடையாளம் காட்டியது வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம்தான். அந்த படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் ஹிட்டானாலும் படம் ப்ளாப் ஆனது.
#image_title
இப்படி 2000 களின் தொடக்கம் வரை யுவன் இசையமைத்த படம் எதுவுமே ஹிட்டாகவில்லை. அதனால் அவரை ராசியில்லாத இசையமைப்பாளர் என்று முத்திரைக் குத்தினர். அதனால் அவருக்கு பெரிய நடிகர்களின் படங்கள் கிடைக்கவில்லை.
அப்போதுதான் அவருக்கு தீனா படத்தின் வாய்ப்பை வழங்கியுள்ளார் அஜித். தனக்குப் படங்கள் வராதது குறித்து சோகத்தில் இருந்த யுவனை நேரடியாக வீட்டுக்கே சென்று சந்தித்த அஜித் “யுவன் உன்னை நம்பி நான் இந்த படம் தர்றேன்” என சொல்லி வாய்ப்பை வழங்கியுள்ளார். அந்த படம்தான் யுவனுக்கு வணிக ரீதியான ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது. இதையெல்லாம் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அதன் பின்னர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி என அடுத்தடுத்து அவருக்குப் படங்கள் அமைய வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…