தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சஞ்சனா சிங். இவர் சென்னையில் பிறந்தாலும் ஆக்ராவில் வளர்ந்தார். அப்பா ராணுவ அதிகாரி என்பதால் வடநாட்டில் தான் படிப்பு அதன் பிறகு நடிப்பின் மீது உள்ள ஆசையால் சென்னைக்கு வந்தார் . விளம்பரங்கள் மற்றும் ரேணிகுண்டா படம் என்று நடிக்க ஆரம்பித்த இவருக்கு அவ்வளவு ஆக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆருத்ரா திரைப்படத்தில் நடிகர் பாக்கியராஜோடு நடித்ததோடு சரி. இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளரை வைத்து ஆடைகள் வடிவமைத்து அணிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்.
இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் கோ, மீகாமன், தனி ஒருவன் மற்றும் சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மீகாமன் திரைப்படத்தில் நடிக்க முதலில் நான் முடியாது என்று கூறினேன். பிறகு இயக்குனர் பல நடிகைகளை பார்த்தும் எதுவும் அவருக்கு செட் ஆகாததால் பிறகு இந்த ஒரு படத்தை எனக்காக நடித்துக் கொடுங்க என்று கூறி என்னிடம் வந்து கேட்டார்.
அவர் அவ்வளவு சொல்லிய பிறகு தான் நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எவ்வளவு காசு கேட்டாலும் உங்களுக்கு கொடுக்கிறேன் என்று இயக்குனர் என்னிடம் கூறினார். என்ன பொறுத்த வர கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடிப்பேன். அதேபோல ஒரே மாதிரியான கேரக்டர்களில் நான் நடிக்க மாட்டேன். நிறைய படங்களை நான் வேண்டாம் என்று சொல்லி இருக்கேன். ஒரே மாதிரியான கதாபாத்திரம் வந்ததால் வித்தியாசமான கதாபாத்திரம் வேண்டுமென்று கூறி பல படங்களை உதவி தள்ளியுள்ளேன் என்று சஞ்சனா பேசியுள்ளார்.
டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…