இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 90’ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக திகழ்ந்து வந்தவர். பல மெய்மறக்கும் காதல் பாடல்களுக்கு சொந்தக்காரர். இப்போதும் அவரது இசையை ரசித்து கேட்கக்கூடிய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் சமீப காலமாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் எந்த ஆல்பமும் ஹிட் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் “GOAT” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
“புதிய கீதை” திரைப்படத்தை தொடர்ந்து 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது “GOAT” திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். ஆதலால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
சமீபத்தில் “GOAT” திரைப்படத்தில் இடம்பெற்ற “விசில் போடு” சிங்கிள் பாடல் வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு இப்பாடல் அவ்வளவாக திருப்தி தரவில்லை என தெரிய வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, யுவன் ஷங்கர் ராஜா குறித்து மிகவும் கடுமையாக பேசியுள்ளார்.
“இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக Unfit ஆன ஆள். என்ன காரணம் என்றால், எதாவது படத்திற்கு கம்போஸிங்கிற்கு அழைத்தால் அவர் வருவதில்லை. ரீரெகார்டிங் போட்டுக்கொடுக்க தேடினால் ஆள் தலைமறைவாகி விடுகிறார். இவ்வாறு யுவன் ஷங்கர் ராஜா இந்த தொழிலில் இருந்து வெகு தூரம் விலகி போய்விட்டார். அப்படிபட்ட யுவன் ஷங்கர் ராஜாவை இழுத்து கொண்டு வந்து கீபோர்டில் உட்கார வைத்தால் அவர் எப்படி மியூசிக் போடுவார்” என்று யுவன் ஷங்கர் ராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார் பிஸ்மி.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக்…