Categories: CINEMA

ஹாலிவுட்டுக்கு அடுத்தபடிய இந்திய சினிமால முதன் முதலில் அதை செய்த ஒரே இசையமைப்பாளர் யுவன் தான்.. புலிக்கு பொறந்தது பூனை ஆகுமா..

போதை என்பது, மது, சிகரெட், போதைப் பொருட்கள் என எதிலிருந்தும் கிடைக்கலாம். ஆனால் அதைவிட அதிகளவிலான போதையை ஒரு பாடல் தரும் என்றால், அது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையால் மட்டுமே முடியும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பியானோவுக்கும், வயலினுக்கும், மின்-கிட்டாருக்கும் இடையே படுக்கைவிரித்து சில லட்சம் காதலர்களை, பல லட்சம் இளைஞர்களை அழவைத்து, சிரிக்கவைத்து, சிலிர்க்கவைத்து, உறங்கவைத்து, கிறங்கவைக்கும் பக்கவிளைவில்லாத போதை மருந்தாகவே மாறியிருக்கிறது யுவனின் இசை.

#image_title

என்ன தான் நடிகர் திலகம் என்றாலும் அவருக்கு இதுவரை பெரிய அளவில் விருதுகள் வழங்கப்படவில்லை. இது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கத் தான் செய்கிறது. அதே கேள்வி தான் யுவனுக்கும். தனது இசையால் இத்தனை லட்சம் ரசிகர்களை கிரங்கடிக்க செய்துள்ள யுவனுக்கு இதுவரையிலும் விருதுகள் பெரிதாக வழங்கப்படாதது ஏன் என்ற கேள்வி இருக்கத் தான் செய்கிறது. யுவனின் பாடல்கள் இப்படி கிறங்கடிப்பதற்கான காரணம், சரியான இசைக்கருவியின் ஒலியை, அதற்கே உரிய இடத்தில் பொருத்துவதால்தான். குறிப்பாக வயலின் ஓசை. தொடக்க கால யுவன் பாடல்களில் வயலினின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

#image_title

இடையில் சில காலம் அவ்வளவு வயலின் சத்தங்கள் இல்லாமல் யுவனின் பாடல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. தொழில்நுட்ப வளர்ச்சியாலும், டெக்னோ இசை வடிவத்தாலும் வயலினுக்கு ஒரு இடைவேளை கொடுத்திருந்த யுவன், மீண்டும் தன் சொந்தத் தயாரிப்பான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் வயலினுக்கென ஒரு தனி இசைத்துணுக்கையே உருவாக்கியிருந்தார். பல பாடல்களின் முன்னிசையை, பியானோவைக் கொண்டே தொடங்குவார் யுவன். அந்த பியானோ ஒலிதான் அடுத்த ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் ஒலிக்கவிருக்கும் பாடலின் உணர்வுகளுக்கான அடித்தளமாக அமையும்.

#image_title

இப்படி தனது இசையால் ரசிகர்களை சொக்க வைக்கும் யுவனுக்கு, பி.ஜி.எம் மன்னன் என்ற அடைமொழியும் உண்டு. ஒரு காலத்தில் ராசி இல்லாத இசையமைப்பாளர் என அழைக்கப்பட்டவர், பின்னாளில் இவரது இசை மட்டுமே மருந்தாய் அமையும் வகையில் தன்னை மெருகேற்றிக் கொண்டார் யுவன். முதன் முதலில் ரீமேக்ஸ் என்ற கான்செப்ட்டை கொண்டு வந்தவர் யுவன். குறும்பு என்ற படத்தில் ஆசை நூறு வகை என்ற பழைய பாடலை இந்த காலத்திற்கு ஏற்றார் போல, குதூகல இசையை நுழைத்து ரசிக்க வைத்தார்.

#image_title

அதேப் போல ஒரு படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாவது இன்றைக்கு சாதாரண விஷயம். அதனை மங்காத்தா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் யுவன். ஹாலிவுட்டில் மட்டுமே பிஜிஎம் என ஆடியோவை வெளியிட்டு வந்த காலத்தில், காதல் கொண்டேன் படம் மூலம் முதன் முதலாக பிஜிஎம்மை மட்டும் ஆடியோ கேசட்டாக வெளியிட்ட பெருமையும் யுவனையே சேரும்.

Archana
Archana

Recent Posts

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

35 நிமிடங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

1 மணி நேரம் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

1 மணி நேரம் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

2 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

4 மணி நேரங்கள் ago

நள்ளிரவில் தயாரிப்பாளர் வீட்டில் 4 மணி நேரமாக காத்திருந்த அஜித் ஷாலினி.. உருக்கமாக பேசிய கலைப்புலி எஸ் தாணு..!!

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன்…

4 மணி நேரங்கள் ago