அடேங்கப்பா., இது நம்ம லிஸ்ட்லே இல்லையே.. வடிவேலுக்கு ஜோடியாகும் திருமணமாகாத 50 வயது 90s நடிகை..

Spread the love

மாமன்னன் வெற்றி படத்தை தொடர்ந்து வடிவேலு மற்றும் ஃபஹத் பாசிலும் மீண்டும்  திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்  என்ற தகவல் நியூ இயர் ஸ்பெஷலாக வெளிவந்தது. பெயரே வைக்காத இந்தத் திரைப்படத்தின் படபிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

95 ஆவது படமாக சூப்பர் குட் லிங்க் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர்  கிருஷ்ணமூர்த்தி  உருவாக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார்கள்; இந்த படத்தில்  வடிவலுவிற்கு ஜோடியாக 90 கிட்ஸ்  ஃபேவரட் நடிகை இணைகிறார் என்ற செய்தி மக்களிடையே வெகுவாக பரவி வருகிறது.
அரசியல் கட்சிக்காக பேசிய வடிவேலுவிற்கு ரெட் கார்ட் கொடுத்து திரை துறையினர் ஒதுக்கி வைத்திருந்த நிலையில் நாய் சேகர் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

மேலும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாகவே வடிவேலுவிற்கு திரைத் துறையில் கம்பேக் கிடைத்தது; இந்த படம் அரசியல் கட்சியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் வடிவேலும் காமெடியாக நடிக்காமல் சீரியசான ஆக்டிங்கில் இறங்கினார். வடிவேலுவிற்கு வில்லனாக  ஃபஹத் பாசில்  மிகக் கச்சிதமான நடிப்புடன் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். இவர்களோடு இணைந்து நடிகர் உதயநிதி ஸ்டாலினும் மற்றும் நடிகை கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார்கள்.

இப்படம் பல்வேறு விமர்சனத்தை பெற்றிருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.  மாமன்னனில் மாஸ் காட்டிய வடிவேலு, ஃபஹத் பாசில் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது.  சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 98வது படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில்; யுவன் சங்கர்ராஜா இசையமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

50 வயதை கடந்த நிலையிலும் கல்யாணம் பண்ணாமல் சிங்கிளாக இருக்கும் நடிகை சித்தாரா 90 கிட்ஸ் பேவரைட் நடிகையாக கொடிகட்டி பறந்தவர்.  இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் புதுபுது அர்த்தங்கள், புது வசந்தம், புரியாத புதிர் போன்ற படங்கள் சித்தாராவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. ஆரம்பத்தில் நாயகியாக நடித்து வந்த அவர், பின்னர் ஹீரோக்களின் தங்கை வேடங்களில் நடித்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவா தலையா சீரியலில் நடித்து வருகிறார்.

வடிவேலு, ஃபஹத் பாசில் இணையும் இந்தப் படம் ரோட் ட்ரிப் ஜானரில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது. அதாவது வடிவேலுவும் ஃபஹத் பாசிலும் ஒன்றாக பயணம் செல்வது போலவும், அப்போது அங்கு நடக்கும் சம்பவங்கள்  தான் படமாக எடுக்கப்பட்டுள்ளது என சினிமாத்துறை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Mahalakshmi

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

6 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

7 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

7 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

8 மணத்தியாலங்கள் ago