யூடியூப் வீடியோவுக்காக போட்ட ‘பிராங்க்’…. 4 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்… கர்ப்பிணி மனைவி சடலத்துடனேயே அமர்ந்திருந்த கொடூர கணவன்….!

Spread the love

தெலுங்கானா மாநிலத்தில் யூடியூப் பிரபலம் ஒருவர் தனது கணவராலேயே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்தியால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான வைஷ்ணவி, ‘வைஷு அம்மா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர். இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது. தொடக்கத்தில் ஹரிபிரசாத்தின் வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், வைஷ்ணவியை உடனே திருமணம் செய்து வைக்கவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என ஹரிபிரசாத் மிரட்டியதால், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு வைஷ்ணவியின் வீட்டிலேயே இந்தத் தம்பதியினர் வசித்து வந்தனர். சமூக வலைத்தளங்களில் இருவரும் இணைந்து வீடியோக்களைப் பதிவிட்டு வந்த நிலையில், இடையில் வரதட்சணை கொடுமை தலைதூக்கியுள்ளது. ஹரிபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வைஷ்ணவியை வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வைஷ்ணவி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்ததால், இடையில் சில காலம் ஹரிபிரசாத் அவரிடம் அன்பாக நடந்து கொண்டுள்ளார். இதனால் குடும்பத்தில் இருந்த கசப்புணர்வுகள் நீங்கி மகிழ்ச்சி திரும்பியதாக அவரது பெற்றோர் நம்பினர்.

ஆனால், இந்த அமைதி நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த மார்ச் 17-ம் தேதி இரவு தம்பதியினருக்கு இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஹரிபிரசாத், அதிகாலை 4 மணியளவில் தனது கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் வைஷ்ணவியைக் கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலையைச் செய்த பிறகு சுமார் இரண்டு மணி நேரம் அதே அறையில் இரத்தக் கறைகளுடன் அமர்ந்திருந்த அவர், காலை 6 மணிக்கு எதுவுமே நடக்காதது போல வெளியே வந்து பல் துலக்கிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நேரம் கடந்தும் வைஷ்ணவி அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மகள் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்துத் தகவலறிந்த போலீசார், வைஷ்ணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த ஹரிபிரசாத்தைத் தனிப்படை அமைத்துத் தேடிய போலீசார், இறுதியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு காலத்தில் காதலுக்காகத் தற்கொலை மிரட்டல் விடுத்த கணவனே, நான்கு மாதக் கர்ப்பிணியான மனைவியை வரதட்சணைக்காகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

2 மணத்தியாலங்கள் ago