கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கடைவீதியில் சுமார் 30 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வரும் சீனிவாசன் என்பவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ‘நாதன் தங்க மாளிகை’ என்ற பெயரில் புதிய கடையைத் திறந்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 17ஆம் தேதி மாலை உறவினர் வீட்டு விசேஷத்திற்காகக் கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலை கடையைத் திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் கட்டிங் மெஷின் மூலம் அறுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாகச் சின்னசேலம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளில், இரண்டு நபர்கள் கடையின் ஷட்டரை மெஷின் கொண்டு அறுத்தது பதிவாகி இருந்தது. அதிர்ஷ்டவசமாக, கடையில் இருந்து நகை எதுவும் திருடு போகவில்லை என்றும், இது வெறும் திருட்டு முயற்சிதான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
திருடர்கள் ஷட்டரை அறுக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருட்டு முயற்சி குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருடு போவது அதிகரித்து வருவதாகவும், எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…