உத்தரப்பிரதேச மாநிலம் கோட்வாலி தேஹாத் பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை, காரில் வந்த இளைஞர்கள் தாக்கி, காரின் பானெட்டின் மீது 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாகல்–தப்ரி சாலையில் ஷேக்க்புரா காடிம் காவல் புறக்காவல் நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சாலை விபத்தை மையமாக வைத்து இந்தச் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை காரில் சென்றவர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அந்தக் காரை “டின் டப்பா” என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த நபரை வாலிபர்கள் தாக்கியுள்ளனர்.
பின்னர், காரில் ஏறிச் செல்ல முயன்ற இளைஞர்களைத் தடுக்க, பாதிக்கப்பட்டவர் காரின் முன் வந்து நின்றார். கார் ஓட்டுநர் நிறுத்தாமல் வேகப்படுத்தவே, அந்த நபர் காரின் பேனெட்டில் விழுந்து ஒட்டிக்கொண்டார். இளைஞர்கள் அவரை 500 மீட்டர் தூரம் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்று இழுத்துச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற பின், திடீரென பிரேக் போட்டதால், பாதிக்கப்பட்டவர் சாலையில் விழுந்துள்ளார்.
பலத்த காயங்களுடன் அந்த நபர் உயிர் பிழைத்தாலும், தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்தக் குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…