புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியைச் சேர்ந்த விவசாயத் தம்பதியின் மகன் செந்தூரன் (25). தொழிற்கல்வி பட்டயப் படிப்பை முடித்த இவர், குடும்பத்தின் வறுமையைப் போக்கிப் பிழைப்புக்காக ஐந்து மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்குச் சென்று, அங்கு ஒரு கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சக ஊழியர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. எதிர்பாராத விதமாக செந்தூரன் மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்னல் தாக்கி செந்தூரன் சுருண்டு விழுந்ததைக் கண்ட சக தொழிலாளர்கள், உடனடியாக மருத்துவமனைக்குத் தகவல் அளித்தனர். பின்னர், தனியார் நிறுவன ஊழியர்கள் செந்தூரனின் பெற்றோருக்குத் தொலைபேசி மூலம் இந்தத் துயரச் செய்தியைத் தெரிவித்தனர். பிழைப்புக்காகச் சென்ற மகன், மின்னல் தாக்கி இறந்த செய்தி கேட்டு குடும்பமும் கிராமமும் சோகத்தில் ஆழ்ந்தது.
உழைத்துச் சம்பாதிக்கச் சென்ற இடத்தில் உயிரிழந்த செந்தூரனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…