சேலம் மாவட்டம் நிலவரப்படி பகுதியைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார். வெல்டிங் வேலை பார்த்த ராஜமுருகனின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். நேற்று அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்குள் பாம்பு புகுந்தது. இதனால் ராஜ முருகனும் அவரது நண்பர்களும் அங்கு சென்றனர். அப்போது ராஜமுருகன் விளையாட்டாக அந்த பாம்பை பிடிக்கலாம் என முயற்சி செய்துள்ளார்.
ஒரு கையால் பாம்பின் தலையை கட்டையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு பாம்பை பிடிக்க முயன்றார். அப்போது திடீரென சீறிய பாம்பு ராஜமுருகனின் கட்டை விரலில் கடித்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் கையில் துணியை கட்டிக்கொண்டு மீண்டும் அந்த பாம்பை பிடிக்க முயன்றார்.
அப்போது வலி அதிகமானதால் அருகில் இருந்தவர்கள் ராஜமுருகனை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதற்குள் விஷம் உடல் முழுவதும் பரவி அவர் சுயநினைவை இழந்தார். மருத்துவர்கள் நீண்ட நேரம் போராடியும் ராஜமுருகனை காப்பாற்ற முடியவில்லை. விளையாட்டாக பாம்பை பிடிக்க முயன்று வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனை இழந்து ராஜமுருகனின் தாய் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.
இந்தியாவில் மிக முக்கியமான ஆவணமான ஆதார் கார்டில் உள்ள தகவல்களைப் புதுப்பிப்பதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குறிப்பிட்ட…
சமையலறையில் பூண்டு வதக்கும்போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க புதினா இலைகள் சிறந்த தீர்வாகும். பூண்டில் உள்ள சல்பர் மூலக்கூறுகளை உடைக்கும்…
கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்புகள் முடி உதிர்வை அதிகரிக்கின்றன. இதற்குத் தீர்வாக…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட நேரம் 'வார் ரூமில்' முகாமிட்டிருந்தது…
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் சேர்க்கை பல்வேறு யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், மே 1, 2026 முதல்…
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா பகுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனின்…