ஐயோ காப்பாத்துங்க..! அதிகாலையில் சிறுமியின் அலறல் சத்தம்… பின்னணியில் நடந்த பகீர் கொடூரம்… வசமாக சிக்கிய வடமாநில வாலிபர்…!!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அதிகாலையில் ஒன்பது வயது சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆரம்பத்தில் குற்றவாளி யார் எனத் தெரியாத நிலையில், டி.எஸ்.பி வெங்கடேஷ் தலைமையிலான பல்வேறு காவல் நிலைய அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில், வீட்டின் பின்புறமாக தப்பிச் சென்ற நபர் அடையாளம் காணப்பட்டார். இதன்படி, மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ்தேவ்ராய் என்பவர்தான் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டார் என்பதை உறுதி செய்த போலீசார், அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொழில்நுட்பக் கோணத்தில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியை விரைவாகக் கைது செய்த டி.எஸ்.பி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி வெகுவாகப் பாராட்டினார்.

Gayathri

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

23 minutes ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

38 minutes ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

1 மணத்தியாலம் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

1 மணத்தியாலம் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

2 மணத்தியாலங்கள் ago