லிப்ட் கேட்ட இளம்பெண்… ஆசையை தூண்டி முதியவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசம்… இறுதியில் நடந்த விபரீதம்…!

By Nanthini on அக்டோபர் 27, 2025

Spread the love

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர் செந்தூரை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இளம்பெண் ஒருவர் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அந்த இளம் பெண் தன்னை திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் என்று முதியவரிடம் அறிமுகம் செய்து கொண்டார். அது மட்டுமல்லாமல் அந்தப் பெண் தன்னை திட்டக்குடி பார்டரில் கொண்டு சென்று விடுமாறு முதியவரிடம் கூறியதால் அவரும் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் கூட்டி சென்றார். செந்துறை அருகே உள்ள அரசுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் சென்ற போது என்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லை, குழுமூர் வரை கொண்டு விடுங்கள் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

செல்லும் வழியில் முதியவரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியும் ஆசையை தூண்டும் வகையிலும் ஆபாசமாக பேசி வலை விரித்துள்ளார். அந்தப் பெண்ணின் பேச்சில் சபலம் அடைந்த முதியவர் அந்த பெண்ணுடன் காட்டுக்குள் ஒதுக்கு புறமான பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்திய நிலையில் முதியவர் அந்த இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் அங்கு திடீரென்று வந்த நிலையில் இருவரும் சேர்ந்து முதியவரை அடித்து உதைத்து அவர் அணிந்திருந்த 6.30 பவுன் நகையை பறித்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட முதியவர் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

   

அந்தப் பகுதியில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த நிலையில் அந்த பெண் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கலையரசி (35) என்பதும் அவருடைய நண்பர் அதே கிராமத்தை சேர்ந்த நவீன் குமார் என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களிடமிருந்து நான்கு பவுன் நகைகள் மீட்கப்பட்டது. தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.