பெங்களூரில் அதிகாலை நடந்த விருந்தின் போது போலீஸ் வந்தால் பீதி அடைந்த 21 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் பால்கனியில் இருந்து வடிகால் குழாய் மூலமாக தப்ப முயன்ற போது தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய தந்தை அளித்த புகாரின்படி, மகள் தனது ஏழு நண்பர்களுடன் பெங்களூரில் உள்ள பிரபல சீ எஸ்டா லார்ஜ் ஹோட்டலில் மூன்று அறைகளை முன் பதிவு செய்து அதிகாலை ஒரு மணி முதல் 5 மணி வரை விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது சத்தம் காரணமாக உள்ளூர் வாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் கண்டித்த பிறகு அந்த பெண் பீதி அடைந்து நான்காவது மாடியிலிருந்து பால்கனியிலிருந்து வடிகால் குழாய் வழியே இறங்க முயன்ற போது நிலை தடுமாறி விழுந்துள்ளார். அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். ஹோட்டல் நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாக பால்கனியில் போதுமான பாதுகாப்பு இல்லை என்று கூறி லார்ஜ் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…