குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த சாஜன் பரய்யா என்ற வாலிபருக்கும் சோனி ரத்தோட் என்ற இளம் பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்தது. இதனிடையே திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு மாப்பிள்ளைக்கும் மணமகளுக்கும் இடையே திடீரென சண்டை வந்துள்ளது. முன்னதாக மாப்பிள்ளையும் மணமகளும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு பழக்கமானவர்கள்.
இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர் . இந்நிலையில் நேற்று திருமண செயலை மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சாஜன் இரும்பு கம்பியை எடுத்து மணமகள் சோனியின் தலையில் தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரின் தலையை சுவற்றில் வேகமாக மோதியதால் பலத்த காயமடைந்த சோனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
மணமகளை கொன்றுவிட்டு சாஜன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணமகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய சாஜனை தேடி வருகிறார்கள். திருமணத்தில் மணமகளை மாப்பிள்ளை அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…