திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவருடைய மூத்த மகளான மீனாட்சி (23) அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன நபருடன் மீனாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இது பற்றி அறிந்த மீனாட்சியின் பெற்றோர் மகளின் வாழ்க்கையை இணைத்து கவலை அடைந்தனர். இந்த பழக்கத்தை கைவிடும் படி கண்டித்துள்ளனர். அந்த ஆண் நண்பரையும் வரவழைத்து கண்டித்தனர்.
இருந்தாலும் தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் மீனாட்சியின் பெற்றோர் அவரை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். பெற்றோரின் பேச்சை கேட்காத மீனாட்சி தொடர்ந்து வேலைக்கு சென்றதால் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் மீனாட்சியை இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இரவு முழுவதும் பல இடங்களில் தேடி அலைந்த போது திண்டுக்கல் பழைய கரூர் ரோடு சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே வெட்டு காயங்களுடன் மீனாட்சி உயிரிழந்து கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் மீனாட்சி பழக்கம் வைத்திருந்த நபர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். வேலைக்குச் சென்ற பெண் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தனது மனைவி தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகக் கூறி, கணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…
தமிழகத்தில் பட்டா நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்வதை எளிமையாக்க அரசு புதிய இணையவழி விண்ணப்ப வசதியை அறிமுகம்…
உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் வீடியோ…
ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலனியில் செயல்படும் ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகை கையாடல் செய்யப்பட்டதாக…
பிரபல தொகுப்பாளனியான பிரியங்கா தேஸ்பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன்பு வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா சூப்பர்…