“அம்மா என்னால முடியல, நான் செத்துடுறேன்”… தாயாருக்கு திடீரென போன் போட்ட மகள்…. அடுத்த நொடியே கணவர் வீட்டில் நடந்த துயரம்….!

Spread the love

கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதியை சேர்ந்த செல்வசரண்(25) என்ற டெம்போ டிரைவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ரேஷ்மா (20) என்ற உறவுக்கார பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தவறாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரேஷ்மாவுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் சரண் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்ததால் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனமடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராஜபாளையத்தில் உள்ள தன்னுடைய தாயாருக்கு செல் போன் மூலமாக தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனே நாகர்கோவிலில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார். இதனைக் கேட்ட உறவினர்கள் உடனே ரேஷ்மா வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் ரேஷ்மா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் திருமணமான ஒன்றை வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

7 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

7 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

7 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

7 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

8 மணத்தியாலங்கள் ago